
அன்புமணியுடன் முரண்பாடு இல்லை என டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார். இதன் மூலம் ஒரு வழியாக பாமகவில் தந்தை – மகனிடையே நடந்து வந்த மோதல் முடிவுக்கு வந்ததாக தெரிகிறது. சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த ராமதாஸ், முடிந்தவை முடிந்தவையாக இருக்கட்டும் இனி அனைத்தும் நல்லவையாக நடக்கட்டும் என்றார். மேலும், கூட்டணி குறித்து விரைவில் முடிவெடுக்கப்படும் எனவும், பாஜகவில் இருந்து அழைப்பு வரவில்லை என்றும் கூறினார்.