பாகிஸ்தானுக்கு உளவு பார்த்ததாக சமூக ஊடகங்களில் பிரபலமான ஜோதி மல்கோத்ரா என்பவர் கைது செய்யப்பட்டார். இவர் தனது youtube தளத்தில் பாகிஸ்தானுக்கு சென்று பல காணொளிகளை வெளியிட்டுள்ளார் இவரிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது. இவருக்கு உளவு பார்ப்பதற்காக பல கோடி ரூபாய் பணம் தரப்பட்டதா என்று அவரது வங்கி கணக்குகளை விசாரித்து வருகிறார்கள்.இது குறித்து அதிகாரிகள் தெரிவிக்கும் போது இவர் நேரடியாக உளவு பார்க்கவில்லை இங்குள்ள தகவல்களை அங்கு தெரிவித்துள்ளார். அவரது லேப்டாப் போன்ற கம்ப்யூட்டர் சாதனைகளை ஆய்வு செய்து வருகிறோம் என்று தெரிவித்தனர்