இந்தியா -பாகிஸ்தான் இடையே வாகா என்ற இடத்தில் இரு தரப்பு குடிமக்களும் கடந்து செல்ல ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.தற்போது பாகிஸ்தானுடன் உறவுகள் துண்டிக்கப்பட்டதால் இந்த எல்லை மூடப்படும் என்று இந்தியா அறிவித்திருந்தது இதற்கான கடைசி நாள் கடந்த ஏப்ரல் மாதம் 30 ஆம் தேதியுடன் நிறைவடைந்தது.அதற்குள் இந்தியாவில் இருந்த பெரும்பாலான பாகிஸ்தானியர்கள் வெளியேறிவிட்டனர். அதேபோல் அங்குள்ள இந்தியர்களும் இங்கு வந்து விட்டனர் .தொடர்ந்து எல்லை மூடப்பட்டதால் கடைசி கட்டத்தில் 70 பாகிஸ்தானியர்கள் நாடு திரும்ப முடியாமல் தவித்து வருகிறார்கள்..அதேபோல சில இந்தியர்களும் நாடு திரும்ப முடியாமல் பாகிஸ்தான் பகுதியில் தவித்து வருகிறார்கள்