தாம்பரம் அருகே அரசு பயணிகளை இறக்கிவிட்ட பேருந்தின் படிகட்டில் நின்ற நடத்துனர் தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது

திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்தவர் சீனிவாசன் (52) போளூர் இருந்து தாம்பரம் வரை செல்லும் தடம் எண் 148 அரசு பேருந்தில் நடத்துனராக பணியாற்றி வந்தார்,

இன்று காலை வழக்கம் போல் பணியில் இருந்த போது தாம்பரம் அருகே வந்த பேரூந்தில் பயணிகளை இறக்கிவிட நடத்துனர் சீனிவாசன் பேருந்து படிகட்டில் நின்றதாக கூறப்படுகிறது,

அப்போது திடீரென நிலைதடுமாறிய சீனிவாசன் பேருந்தில் இருந்து தாவறி சாலையில் விழுந்ததில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது,

இதனை கண்ட ஓட்டுனர் முருகன் உடனடியாக பேருந்தை நிறுத்திவிட்டு பொதுமக்கள் உதவியுடன் சீனிவாசனை மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர் அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்,

தகவல் அறிந்து வந்த குரோம்பேட்டை போக்குவரத்து புலனாய்வு போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரனை செய்து வருகின்றனர்,

இதனால் ஜி.எஸ்.டி சாலையில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.