பழைய பல்லாவரத்தில் திருப்பெரும்புதூர் மக்களவை அதிமுக வேட்பாளர் பிரேம்குமார் பிரச்சாரத்தின்போது இரு கோஷ்டி மோதிகொண்டதால் பரபரப்பு. பிரச்சார வாகனம் முன்பக்க கண்ணாடி உடைப்பு.

முன்னாள் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் தன்சிங், அவரது மகன் அதிமுக பகுதி செயலாளர் ஜெயப்பிரகாஷ் உள்ளிட்டோர் அதிமுக வேட்பாளர் பிரேம்குமார் பிரச்சார வாகனத்தில் உடன் வந்தனர்.

அதிமுக நிர்வாகியான ராஜப்பா பெண்களை திரட்டி அங்குள்ள கோவில் வாளாகம் முன்பாக வரவேற்பு அளிக்க காத்து இருந்தார். அதற்கு முன்னாள் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் அனுமதியளிக்கவில்லை. இதனால் இருதரப்பிலும் மாறி மாறி தாக்கி குரல் எழப்பினார்கள். தன்சிங், அவரது மகன் ஜெயபிரகாஷ்க்கு எதிராக கோஷம் எழுப்பிய பெண்களை பார்த்து தன்சிங் தரக்குறைவாக பேசியதாக கூறப்படுகிறது,

இதனால் தன்சிங் ஒழிக என பெண்களும் ராஜப்பா அதரவாளர்களும் கோஷங்கள் எழுப்பினர்கள்.

பிரச்சார வாகனத்தை மறித்த ஒரு தரப்பு கும்பல் வாகனத்தின் முன்பக்க கண்ணாடி முட்டி மோதியதால் கண்ணாடி உடைந்தது.

இதனால் அப்பகுதியே பரபரப்பாக காணப்பட்டது.

ஆதிமுக கோஷ்டி பூசல் வெடித்து இரு கோஷ்டி சண்டை போட்டபோது வேட்பாளர் பிரேம்குமார் சமாதானப்படுத்தால் கைகுப்பியவாறு வாக்கு சேகரித்தவாறு வாகனத்தில் நின்று இருந்தார்.