
பள்ளிகரனை அருகே இருசக்கர வாகனம் கட்டுபாட்டை இழந்து தடுப்பு சுவர் மீது மோதியதில் சிறுவன் உயிரிழப்பு
சென்னை பல்லாவரம் பகுதியை சேர்ந்தவர் விஷ்வேஸ் (16) பத்தாம் வகுப்பு படித்து வந்தவர் நேற்று தனது நண்பர் ஹரிஹாசனுடன் வேளச்சேரி செல்வதற்காக மேடாவாக்கம் மேம்பாலம் வழியாக சென்று கொண்டிருந்த போது கட்டுபாட்டை இழந்த இருசக்கர வாகனம் தடுப்பு சுவற்றில் மோதி சாலையில் விழுந்ததில் விஷ்வேஸ் தலையில் பலத்த காயமடைந்தார் ஹரிஹாசன் சிறு காயங்களுடன் உயிர் தப்பினார்.
விப்த்தை நேரில் கண்டவர்கள் உடனடியாக இருவரையும் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள் விஷ்வேஸ் ஏற்கனவே இறந்துவிட்டாக தெரிவித்தனர்.
தகவல் அறிந்து வந்த பள்ளிகரனை போலீசார் உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து விசாரணை செய்து வருகின்றனர்.