பல்லாவரத்தில் போக்குவரத்து காவல்துறை மற்றும் தமிழ்நாடு காவல் போக்குவரத்து காப்பாளர் அமைப்பு சார்பாக 300 பள்ளி மாணவர்கள் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணியாக சென்றனர்.

பல்லாவரத்தில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக முதன்மை போக்குவரத்து காப்பாளர் பூ.கருப்பையா தலைமையில் பல்லாவரம், மறைமலை அடிகள் அரசு மேல்நிலைப்பள்ளி, புனித தெரேசா பெண்கள் மேல்நிலைப்பள்ளி, தூய செபாஸ்டின் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியை சேர்ந்த 300 மாணவ மாணவிகள் பல்லாவரம் ஜி.எஸ்.டி சாலையில் விழிப்புணர்வு பிரசார பேரணியை துவங்கி பம்மல் மெயின் ரோடு ரோடு வழியாக சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு பாதாகைளுடன் ஊர்வலமாக சென்று பொதுமக்களுக்கு மற்றும் வாகன ஓட்டிகளுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்கள்.

இந்த விழிப்புணர்வு பேரணியில் தாம்பரம் போக்குவரத்து உதவி ஆணையாளர் அறிவழகன், பல்லாவரம் போக்குவரத்து ஆய்வாளர் மணவாளன், தாம்பரம் ஆய்வாளர் சீனிவாசன், துணை முதன்மை காப்பாளர் தாண்டவமூர்த்தி, போக்குவரத்து பணி திட்டமிடல் காப்பாளர் பத்மநாபன், போக்குவரத்து காப்பாளர்கள் ராஜா, கமலக்கண்ணன், முரளி, விஜய் மற்றும் பல்வேறு காவல்துறையினர் பங்கேற்றனர்.