காஞ்­சி­பு­ரம் வடக்கு மாவட்­டம் தாம்பரம் மாநகரம் பம்மல் தெற்கு பகுதி தி.மு.க. சார்பில் பகுதி கழக செயலாளர் தாம்பரம் மாநகராட்சி 1வது மண்டல குழுத் தலைவர் வே.கருணாநிதி அவர்கள் ஏற்பட்டில் பம்மல் மண்டல அலுவலகம் அருகில் அமைக்கப்பட்ட நீர்-மோர் பந்தலை காஞ்­சி­பு­ரம் வடக்கு மாவட்ட கழக செயலாளர், குறு-சிறு மற்­றும் நடுத்­தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்­சர் தா.மோ.அன்­ப­ர­சன் திறந்து வைத்து மோர், தர்பூசணிபழம், இளநீர், கிர்ணிபழம், ரோஸ் மில்க், பாதாம் மில்க், பிஸ்தா மில்க், சாக்லேட் மில்க், வெள்ளிரிக்காய் குளிர்ச்சி தரும் பழ,காய், குளிபானங்களை பொதுமக்களுக்கு வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் தாம்பரம் மாநகர செயலாளரும் தாம்பரம் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.ஆர்.ராஜா, தாம்பரம் மாநகர அவைத் தலைவரும், தாம்பரம் மாநகராட்சி துணை மேயர் கோ.காமராஜ், பம்மல் தெற்கு பகுதி நிர்வாகிகள், வட்ட கழக செயலாளர்கள், மாமன்ற உறுப்பினர்கள்,மாவட்ட-மாநகர-பகுதி அணிகளின் அமைப்பாளர்-துணை அமைப்பாளர்கள்,வட்ட கழக நிர்வாகிகள்,கழக தோழர்கள் கலந்து­கொண்டு நிகழ்ச்­சியை சிறப்பித்தனர்…