நடப்பு கல்வியாண்டு முதல், எம்.பி.பி.எஸ்., மாணவர்களுக்கு, தேசிய எக்ஸிட் டெஸ்ட் என்ற, ‘நெக்ஸ்ட்’ தேர்வு அமல்படுத்தப்படும் என, தேசிய மருத்துவ ஆணையம் தெரிவித்துள்ளது.

தேசிய மருத்துவ ஆணையம் நெக்ஸ்ட் நிலை 1, நெக்ஸ்ட் நிலை 2 என இரண்டு கட்டங்களாக தேர்வு நடத்த உள்ளது.

அதன்படி, ஐந்தரை ஆண்டுகள் கொண்ட எம்.பி.பி.எஸ்., படிப்பில், முதல் நான்கரை ஆண்டுகள் முடித்தபின், நெக்ஸ்ட் நிலை 1 தேர்வு எழுதி தேர்ச்சி பெற வேண்டும்.

அப்போது தான் ஓராண்டு பயிற்சி டாக்டராக பணியாற்ற முடியும்.

பயிற்சி டாக்டராக பணியாற்றிய பின், நெக்ஸ்ட் நிலை 2 தேர்வை எழுதி தேர்ச்சி பெற வேண்டும்.

இந்த தேர்வு, 2019ம் ஆண்டு எம்.பி.பி.எஸ்., சேர்ந்த மாணவர்களுக்கு நடைமுறைக்கு வருகிறது.

இதையொட்டி, நாடு முழுதும் ஆன்லைனில் நெக்ஸ்ட் தேர்வு வரும், 28ம் தேதி ஆன்லைனில் நடைபெறும் என, தேசிய மருத்துவ ஆணையம் அறிவித்துள்ளது.

மேலும் விபரங்களை, https://www.nmc.org.in என்ற இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம்.