சட்டப் பல்கலை தேர்வுகள் ஒத்திவைப்பு

சென்னை அம்பேத்கர் சட்டப் பல்கலைக் கழகத்தின் அனைத்து தேர்வுகளும் இன்று ஒத்திவைக்கப்படுவதாக பதிவாளர் அறிவித்துள்ளார். இந்த தேர்வுகள் எப்போது நடத்தப்படும் என பின்னர் அறிவிக்கப்படும்.
மாணவர்கள் நலன் கருதி காலாண்டு தேர்வு விடுமுறையை நீட்டிக்க அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நல கூட்டமைப்பு அமைச்சருக்கு கோரிக்கை

மாணவர்களுக்கு அக்.2ம் தேதி வரை, ஐந்து நாட்கள் மட்டுமே விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அக்.7ம் தேதிக்கு பள்ளி திறப்பை ஒத்திவைக்க வேண்டும் என கோரிக்கை
டிஎன்பிஎஸ்சி தேர்வு மதிப்பீட்டில் புதிய மாற்றம்
டிஎன்பிஎஸ்சி முதன்மை தேர்வுகளில் இனி பாட வாரியாக தேர்வர்களின் விடைத்தாள்கள் தனித்தனியே மதிப்பீடு வெளிப்படை தன்மையை உறுதிப்படுத்தும் வகையில் மாற்றங்களை கொண்டு வர முடிவு.
இந்தியாவில் கடந்த ஆண்டு 10, 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் மொத்தம் 65 லட்சம் மாணவர்கள் தோல்வி அடைந்துள்ளதாக ஒன்றிய கல்வி அமைச்சக அதிகாரிகள் தகவல்!

இதில் 10ம் வகுப்பில் தேர்ச்சி பெறாதவர்கள் எண்ணிக்கையில் மத்திய பிரதேசமும், 12ம் வகுப்பில் தேர்ச்சி பெறாதவர்கள் எண்ணிக்கையில் உத்தரபிரதேசமும் முதலிடம் பிடித்துள்ளன!
நாடு முழுவதும் வரும் 21ம் தேதி நடைபெற உள்ள யுஜிசி நெட் தேர்வை ஒத்திவைக்க கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை தள்ளுபடி செய்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது

ஒன்பது லட்சம் மாணவர்கள் இந்த தேர்வை நடத்த உள்ளதால் அவர்களது எதிர்காலம் பாதிப்படையும் எனக் கூறி மனுவை தள்ளுபடி செய்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது ஏற்கனவே தேசிய தேர்வுகள் முகமை நடத்திய தேர்வுகள் பல்வேறு முறைகேடுகள் நடந்திருப்பதாக புகார்கள் எழுந்துள்ள நிலையில் அதை குறையாக விசாரித்து முடித்த பிறகு தான் இந்த தேர்வை நடத்த வேண்டும் என மாணவர்கள் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது
முதுகலை நீட் – தேர்வு மையம் ஒதுக்கீட்டில் குளறுபடி?

PG நீட் தேர்வு – தமிழ்நாட்டு மாணவர்களுக்கு ஆந்திராவின் உட்பகுதியில் தேர்வு மையங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு. வரும் 11ம் தேதி தேர்வு நடக்க உள்ள நிலையில், தற்போது ரயில்களிலும் முன்பதிவு டிக்கெட் இல்லை, விமான டிக்கெட் கட்டணம் ₹40,000 வரை காட்டுகிறது என தேர்வு எழுத இருப்போர் வேதனை.
ஹில்டன் பள்ளி மாணவி S.M.ஜெயப்பிரதா நடந்த பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் (2023&2024) தமிழில் 91/100, 485/500 பெற்று பள்ளியில் இரண்டாம் இடத்தை பெற்றிருந்தார்

ஹில்டன் பள்ளி மாணவி S.M.ஜெயப்பிரதா நடந்த பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் (2023&2024) தமிழில் 91/100, 485/500 பெற்று பள்ளியில் இரண்டாம் இடத்தை பெற்றிருந்தார். மறு கூட்டலுக்குப் பிறகு தமிழ் மதிப்பெண்கள் 96/100 மாற்றப் பெற்று மொத்த மதிப்பெண்கள் 490/500 ஆக உயர்ந்தன. ஆகவே அவர் முதல் இடத்தை அடைந்தார். இதனை பெருமை கொள்ளும் வகையில், ஹில்டன் பள்ளியின் தாளாளர், தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள், பெற்றோர்கள், மாணவர்கள் மற்றும் அனைத்து பணியாளர்களும் வாழ்த்து தெரிவித்தனர்.
யுஜிசி நெட் தேர்வு – கணினிவழியில் நடத்த முடிவு

ரத்து செய்யப்பட்ட யுஜிசி நெட் தேர்வு தேதி அறிவிப்பு; ஆக.21ஆம் தேதி முதல் செப்.4 ஆம் தேதி வரை நடைபெறும். ஏற்கெனவே நடைபெற்ற எழுத்துத் தேர்வு இம்முறை, கணினி வழியில் நடைபெறும். சிஐஎஸ்ஆர்-யுஜிசி நெட் தேர்வும் ஜூலை 25 முதல் 27 ஆம் தேதி வரை நடைபெறும். என்சிஈடி தேர்வு, ஜூலை 10 ஆம் தேதி நடைபெறும் – தேசியத் தேர்வு முகமை அறிவிப்பு.
யுஜிசி நெட் தேர்வு நடப்பதற்கு முன் வினாத்தாள் ரூ.6 லட்சத்துக்கு விற்பனை

புதுடெல்லி: கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் உதவிப் பேராசிரியர் பணி மற்றும் ஆய்வுப் படிப்பு உதவித் தொகைக்கான தகுதியை தீர்மானிக்க யுஜிசி – நெட் தேர்வை தேசிய தேர்வு முகமை (என்டிஏ) நடத்துகிறது. இந்தஆண்டு யுஜிசி – நெட் தேர்வு கடந்த செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இத்தேர்வில் முறைகேடுகள் நடந்ததற்கான முகாந்திரம் இருப்பதாக தேசிய சைபர் கிரைம் அளித்த தகவலின் அடிப்படையில் மறுநாள் இத்தேர்வை மத்திய கல்வி அமைச்சகம் ரத்து செய்தது. மேலும் இதுகுறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டது. இந்நிலையில் […]
2327 பணியிடங்களை நிரப்புவதற்கான டி.என்.பி.எஸ்.சி குரூப் 2, 2A தேர்வுகள் செப்டம்பர் 14ம் தேதி நடக்கவிருக்கின்றன..

இத்தேர்வுகளை எழுத விரும்பும் பட்டதாரிகள் tnpsc.gov.in என்ற இணையதளத்தில் இன்று முதல் அடுத்த மாதம் 19 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்..