இந்தியா பாகிஸ்தான் சண்டையின் போது துருக்கி நாடு பாகிஸ்தானுக்கு ஆதரவாக செயல்பட்டு வருகிறது இதனால் இந்திய நிறுவனங்கள் துருக்கியை புறக்கணிக்க தொடங்கியுள்ளன துருக்கி விமானத்தை பயன்படுத்த மாட்டோம் என்று சிலர் அறிவித்துள்ளனர் துருக்கியில் இருந்து ஏராளமான மார்பில் கற்கள் இந்தியாவுக்கு இறக்குமதி செய்யப்படுகின்றன இனிமேல் அவற்றை இறக்குமதி செய்ய மாட்டோம் என்று ராஜஸ்தானை சேர்ந்த நிறுவனங்கள் அறிவித்துள்ளனர்.

ஆபரேஷன் சிந்தூர் போது பாகிஸ்தானுக்கு ஆதரவு அளித்ததால் துருக்கியிலிருந்து இறக்குமதி செய்வதை ராஜஸ்தானின் மார்பிள் டிரேடர்ஸ் நிறுத்தி உள்ளனர்.

“நாங்கள் துருக்கிய மார்பிளின் மிகப்பெரிய சந்தைகளில் ஒன்றாகும், மேலும் துருக்கியுடனான வர்த்தகத்தை நிறுத்த முடிவு செய்துள்ளோம்” என்று அவர்கள் கூறினர்.

“இந்தியா சுமார் 14 முதல் 16 லட்சம் டன் மார்பிள் இறக்குமதி செய்கிறது, இதில் 70 சதவீதம் துருக்கியிலிருந்து வருகிறது. துருக்கிக்கு பெரும் இழப்பாகும்.மேலும் துருக்கியில் இருந்து ஆப்பிள் இறக்குமதியும் நிறுத்தப்பட்டு விட்டது.