
அண்ணா பல்கலைக்கழக பாலியல் வன்கொடுமை வழக்கில் தொடர்புடைய சார் ஒருவர் மறைக்கப்படுகிறார் என்றும், அவரையும் வெளிச்சத்துக்கு கொண்டு வர வேண்டும் என பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.
ஞானசேகரனுக்கு 30 ஆண்டு சிறை தீர்ப்பு வரவேற்கத்தக்கது. இதே போல் ஒரத்தநாட்டு வழக்கிலும் விரைவில் தீர்ப்பு வழங்க வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.
ஆனால் இந்த வழக்கில் வேறு யாரும் கிடையாது ஞானசேகரன் சார் என்று யாரையும் குறிப்பிட்டு சொன்னது தன்னை காப்பாற்றிக் கொள்ளவே என்று அரசு வழக்கறிஞர் தெரிவித்தார்.நீதிமன்றம் ஏற்றுக் கொண்டதாகவும் அவர் கூறினார்.
ஆனால் எடப்பாடி பழனிச்சாமி தமிழிசை சௌந்தரராஜன் கூட பல எதிர்க்கட்சித் தலைவர்கள் அந்த சார் யார் என்பதை கேட்டு விமர்சித்து வருகின்றனர்