
பல்லாவரம் ஜிஎஸ்டி சாலையில் இருசக்கர வாகனம் தீபற்றி எரிந்து நாசம்
தாம்பரத்தில் இருந்து சென்னை பல்சர் இருசக்கர வாகனத்தை நபர் ஒருவர் திருநீர்மலை சிக்னலை கடந்து செல்லும்போது திடீரென இருசக்கர வாகனத்தில் இருந்து இன்ஜின் பகுதியில் இருந்து புகை வந்துள்ளது. இதை பார்த்த இருசக்கர வாகன ஓட்டிய நபர் இருசக்கர வாகனத்தை சாலை நடுவே நிறுத்திவிட்டு இறங்கி நின்றார். அதே நேரத்தில் இருசக்கர வாகனம் தீபற்றி கொழுந்துவிட்டு எரிந்தது. அக்கம் பக்கம் தண்ணீர் ஏதும் கிடைக்காத நிலையில் இருசக்கர வாகனம் முழுவதும் எரிந்து நாசமானது…
இது குறித்து சேலையூர் போக்குவரத்து புலனாய்வு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்..