
வர இருக்கும் சட்டமன்றத் தேர்தலில் திமுகவில் தகுதியான வேட்பாளர்கள் என்ற அளவுகோல் எடுக்கப்பட்டிருப்பதால் இப்போது உள்ள எம்எல்ஏ-க்களில் பாதிப் பேருக்கு மேல் மீண்டும் சீட் கிடைக்க வாய்ப்பில்லை. சாதிய பின்னணி, பணபலம், நற்பெயர், தொகுதியில் தனித்த செல்வாக்கு உள்ளிட்ட தகுதிகளுடன் இம்முறை வேட்பாளர்களைத் தேடுகிறது திமுக. இதனால், கட்சி சாராத, கட்சியில் முக்கிய பத வியில் இல்லாதவர்களுக்கும் கூட இம்முறை வாய்ப்புக் கிடைக்கலாம்” என் து கூறப்படுகிறது