மூன்று ஆண்டுகாளமாக திமுகவில் எந்த வித பணியும் தனக்கு அளிக்கவில்லை என்று தாம்பரத்தில் திமுக மாவட்ட அமைப்புசாரா ஓட்டுனர் அணி அமைப்பாளர் மற்றும் அடிப்படை பதிவிகளில் இருந்து விலகினார் தாம்பரம் நாராயணன்

தற்போது வரை எந்த கட்சியில் இணைவது குறித்து எந்த எண்ணமும் இல்லை என்று பேட்டி

கிழக்கு தாம்பரம் பகுதி சேர்ந்தவர் நாராயணன் பிரபல தொழிலதிபரான இவர் பதினாறு ஆண்டுகள் ஜனதா தளம் கட்சியிலும் 20 ஆண்டுகாலம் காங்கிரஸில் மாநில பொதுக்குழு உறுப்பினர் மாநில பிரச்சார செயலாளர் போன்ற பதவிகளைத் வகித்தார்.

கடைசியாக 2016ல் அதிமுக அதற்குப்பின் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தில் ஐந்து ஆண்டுகள் பணியாற்றி உள்ளார். அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தில் பணியாற்றினார்.

பின்பு திமுக தலைவர் ஸ்டாலினின் செயல்பாட்டில் ஈர்ப்பு கொண்டு 21 7 2021 இல் செந்தில் பாலாஜி வழிகாட்டுதலின்படி அமைச்சர் தா.மோ.அன்பரசன் முன்னிலையில் திமுகாவில் இணைந்து மாவட்ட அமைப்புசாரா ஓட்டுனர் அணி அமைப்பாளர் பதவி வகித்து பணியாற்றி வந்தார். அப்போது தாம்பரம், பல்லாவரம், ஆலந்தூர் பகுதியில்
1,200 அம்மா மக்கள் முன்னேற்றக் கழக உறுப்பினர்களை திமுகவில் இணைத்தார். திமுகவின் அறிவுறுத்தலின்படி முகாம்கள் ஏற்படுத்தி புதிய 1500 உறுப்பினர்களை திமுகவில் இணைத்துள்ளார்.

தொடர்ந்து மூன்று ஆண்டுகளாக திமுகவில் எந்த வித அடிப்படை பணிகளையும் வழங்கவில்லை என்றும், தற்போது திமுகவில் தன்னை எந்தப் பணியும் செய்ய அனுமதிக்கவில்லை தன்னை திமுக சரியாக பயன்படுத்தவில்லை என்ற அதிருப்தியில் திமுக அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து விலவுகுவதாக முதலமைச்சர் முக ஸ்டாலின்னுக்கு கடிதம் அனுப்பிவிட்டு தி.மு.கவிலிருந்து விலகிக் கொண்டார்.

மேலும் தற்போது வரை எந்த கட்சியில் இணைவது குறித்து எந்த எண்னமும் இல்லை என்றும் தெரிவித்தார்.