தாம்பரம் மாநகராட்சியில் 8 வயது சிறுவனை நான்கு தெரு நாய்கள் சுற்றி வளைத்து கடித்து குதறியதால் பிளாஸ்டிக் சர்ஜரி செய்யும் நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளார்.

தாம்பரம் மாநகராட்சியில் பல்வேறு இடங்களில் நாய்கள் தொல்லைகள் அதிகரித்து சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பாதிக்கப்பட்டும் கண்டு கொள்ளாத மாநகராட்சி அதிகாரிகள்

என் பிள்ளைக்கு நடந்தது போல் வேறு ஒருவருக்கும் நடக்கக்கூடாது என வேண்டுகோள் விடுத்த பெற்றோர்

சென்னை அடுத்த தாம்பரம் மாநகராட்சிக்குட்பட்ட 39வது வார்டு, திருமலை நகர் 5வது தெருவில் வசிக்கும் முரளி இவர் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து கொண்டு, பகுதி நேரமாக கார் ஓட்டுநராக பணி செய்து வருகிறார். இவரது மனைவி பெயர் சசிகலா இவர் அதே பகுதியில் உள்ள தனது வயதான உறவினர் வீட்டிற்கு தினந்தோறும் உணவு எடுத்து செல்வது வழக்கம் அதேபோல சம்பவம் நடந்த அன்று முரளியின் மனைவி சசிகலா வயதான உறவினர்களுக்கு உணவு எடுத்துக் கொண்டு சென்றுள்ளார். வெகு நேரம் மாகியும் தனது தாய் வராததை பார்த்து அந்த வீட்டிற்கு பாதிக்கப்பட்ட சிறுவன் மைதீஸ்வரன்(8) சென்றுள்ளார். அப்பொழுது அந்த வீட்டின் வாசலில் படுத்திருந்த தெரு நாய்கள் சுமார் நான்கு நாய்கள் சிறுவனை துரத்தி உள்ளது. இதனைக் கண்ட சிறுவன் பயந்து அலறியுள்ளான். இதில் நான்கு நாயிகள் வைத்தீஸ்வரனின் சட்டை, கால் சட்டை மற்றும் உடலில் கைப்பகுதியை பிடித்து குதறி உள்ளது. இதில் படுகாயம் அடைந்த மைதீஸ்வரன் அலறியுள்ளான். குழந்தை கத்தும் சத்தத்தை கேட்ட எதிரில் இருந்த நபர் ஒருவர் நாய்களை விரட்டி விட்டு சிறுவனை காப்பாற்றி வீட்டுக்குள் இருந்த பெற்றோருக்கு தகவல் கொடுத்து உள்ளார். உடனடியாக அருகே உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு முதல் சிகிச்சை கொடுக்கப்பட்டது. பின்னர் மேல் சிகிச்சையாக குரோம்பேட்டையில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்று நாய் கடி ஊசி உள்ளிட்ட மேல் சிகிச்சைகளை அளித்துள்ளனர். இதில் சிறுவனின் இடது முழங்கை முட்டிக்கு மேல் உள்ள கையின் பின்புறம் உள்ள முழு சதைகளையும் நாய் கடித்து குதறி எடுத்தினால் அந்தப் பகுதியில் முழு சதைகளும் இல்லாமல் போனதால் சிறுவனுக்கு தோல் அறுவை சிகிச்சை செய்தால் மட்டுமே மீண்டும் பழைய கைகள் போல் ஆகும் என மருத்துவர்கள் கூறியுள்ளார்கள்.
தற்சமயம் சிறுவனுக்கு முதல் சிகிச்சை அளித்து கட்டுகள் போடப்பட்டு உள்ளது. எனவே இதே போல தாம்பரம் பெரும்பாலான பகுதியில் நாய்கள் தொல்லை அதிகரித்து உள்ளது. சாலையில் ஆங்காங்கே கும்பல் கும்பலாக 10,20 நாய்கள் இருப்பதால் அவ்வழியாகச் செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகளையும் நான்கு சக்கர வாகன ஓட்டிகளையும் துரத்தி செல்லும் காட்சியிலும் நடந்தேறி வருகிறது. மேலும் இதுபோல சம்பவங்கள் மீண்டும் நடைபெறாமல் இருப்பதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாதிக்கப்பட்ட சிறுவனின் தந்தை மாநகராட்சிக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.