
உலக கல்லீரல் கொழுப்பு தினத்தை முன்னிட்டு தாம்பரம் மாநகர ஆணையரக காவலர்களுக்கு பைப்ரோ ஸ்கேன் கல்லீரல் பரிசோதனை முகாம் நடைபெற்றது.
சென்னை சோழிங்கநல்லூர் அடுத்த பெரும்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் ஜூன் 13 உலக கல்லீரல் தினத்தை முன்னிட்டு ஜூன் மாதம் முழுக்க உலக கல்லீரல் கொழுப்பு மாதமாக கடைப்பிடிப்பதை தொடர்ந்து
தாம்பரம் மாநகர காவல் ஆணையரக காவலர்களுக்கும் அதிகாரிகளுக்கும்
இலவச பைப்ரோ ஸ்கேன் கல்லீரல் பரிசோதனை முகாம் இலவசமாக நடைபெற்றது.
உலக கல்லீரல் கொழுப்பு மாதமாக ஜூன் மாதம் கடைப்பிடிப்பதை தொடர்ந்து இந்த ஸ்கேனிங் பரிசோதனைக்கு 5000 ரூபாய் வரை செலவாகும் என்ற நிலையில்
இந்த மாதம் முழுக்க இலவசமாக கல்லீரல் பரிசோதனையை இந்த மருத்துவமனை அளிக்கிறது.
மேலும் இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட தாம்பர மாநகர காவல் துறை கூடுதல் ஆணையர் மகேஸ்வரி குத்துவிளக்கேற்றி முகமை துவங்கி வைத்தார்.
மேலும் இது குறித்து பேசியவர் நமது உடலில் கல்லீரல்
மிக முக்கியமான உறுப்பு என்றும் அதை பாதுகாப்பது அவசியமான ஒன்று என்றும் கூறினார்.
துவக்க நிகழ்வுக்கு பிறகு பல்வேறு காவல் நிலையங்களை சார்ந்த காவலர்கள்
பைப்ரோ ஸ்கேன் கல்லீரல் பரிசோதனை செய்து கொண்டனர்.
அவர்களுக்கு பரிசோதனைக்கான முடிவுகள் உடனடியாக வழங்கப்பட்டது.
மேலும் இந்த முகாமில் 200க்கும் மேற்பட்ட காவலர்கள் கலந்து கொண்டனர்.