தாம்பரம் ஜிஎஸ்டி சாலை ரயில்வே இணைப்பு மேம்பாலம் பராமரிப்பில் குறைபாடு உள்ளதாக பொதுமக்கள் புகார் தெரிவித்ததால் எம்எல்ஏ நேரில் வந்து ஆய்வு செய்தார்.

தாம்பரம் ரயில் நிலையம் அருகே ஜி.எஸ்.டி சாலை இணைப்பு ரயில்வே மேம்பாலம் அமைக்கப்பட்டு பல மாதங்கள் ஆகிவிட்டன. ஆனால் இந்த பாலம் பராமரிப்பு முறையாக இல்லை என்ற புகார் எழுந்துள்ளது. அடிக்கடி அந்த பாலத்திற்கான நகரும் படிக்கட்டு அந்த பழுது அடைந்து விடுகிறது.

அதை உடனடியாக யாரும் சரி செய்வது இல்லை.

மேலும் அந்த பகுதியில் கடைகள் மற்றும் பிச்சைக்காரர்கள் தொல்லையும் அதிகமாக உள்ளது. அங்குள்ள ஒரு கிறிஸ்தவ கோவில் அருகேயும் யாராவது நின்று நோட்டீஸ் கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.

மேலும் நகரும் படிக்கட்டு பகுதியில் சுகாதார சீர்கேடும் உள்ளது.
நீ தொடர்பாக தாமோ சட்டமன்ற உறுப்பினர் எஸ் ஆர் ராஜாவிடம் புகார் தெரிவிக்கப்பட்டது அவர் உடனடியாக நேரில் வந்து இதனை ஆய்வு செய்தார்.

பத்து நாட்களுக்குள் அனைத்தையும் சரி செய்யுமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

அதிகாரிகளும் உடனடியாக சரி செய்வதாக உறுதி அளித்தனர்.