தாம்பரம் மாநகராட்சி குப்பை கிடங்கில் கடும் வெயில் காரணமாக தீ பற்றி எரிந்து வருகிறது. கரும்புகை சுற்றுவட்டத்தில் சூழ்ந்துள்ளதால் பதட்டம், 2 தீயணைப்பு வாகனத்தில் வந்தவீரகள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

சென்னை தாம்பரம் கடப்பேரியில் மாநகராட்சியின் குப்பை கிடங்கு செயல் பட்டு வந்தது. கடும் வெயில் காரணமாக திடீரென தீ பற்றி எரிந்தது. இதனையடுத்து தாம்பரம், கிண்டி ஆகிய தீயணைப்பு நிலை வாகனத்தில் வந்த வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

தீ மேலும் பரவி முழு குப்பை கிடங்கிலும் பற்றி எரிவதால் அங்கம் பக்கதிற்கும் தீ பறவும் ஆபத்து ஏற்பட்டுள்ளது. மேலும் கரும்புகை எழுந்து சுற்றியுள்ள குடியிருப்புகளை சூழ்ந்துள்ளது.