தாம்பரத்தில் ஆட்டோ ஓட்டுனர்களுடன் போலீசார் கலந்தாய்வு

மது போதையில் ஆட்டோ ஓட்டினாளோ பொதுமக்ககுக்கு இடையூறு செய்தாலோ கடுமையான நடவடிக்கை எடுக்கபடும் என்று தாம்பரம் போலீசார் ஆட்டோ ஓட்டுனர்களுக்கு கடும் எச்சரிக்கை

சென்னை தாம்பரம் பேருந்து நிலையத்தில் கடந்த 28 ம் தேதி இரவு ஆட்டோ ஓட்டுனர் கார்த்திக் ராஜா என்பவர் ஆட்டோ நிறுத்துவதில் ஏற்பட்ட தகராறில் மற்றொரு ஆட்டோ ஓட்டுனர் ஆனந்தன் மற்றும் கூட்டாளிகளால் வெட்டி கொலை செய்யபட்டார்.

இந்நிலையில் தாம்பரம் காவல் உதவி அணையாளர் நெல்சன், காவல் ஆய்வாளர் பாலமுரளி சுந்திரம் ஆகியோர் தாம்பரத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் ஆட்டோ சங்க நிர்வாகிகளுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சியை போலீசார் நடத்தினார்கள் இதில் 300 க்கும் மேற்பட்ட ஆட்டோ ஓட்டுனர்கள் கலந்துக்கொண்டனர்.

ஆட்டோ ஓட்டுனர்கள் இடையே பிரச்சனை ஏற்பட்டதால் அது குறித்து சங்க நிர்வாகிகளிடம் தெரிவிக்க வேண்டுமே தவிர தாங்களாகவே எந்த வித மோதல் முடிவுகளை எடுக்க கூடாது.

புதிதாக எந்த ஆட்டோ ஓட்டுனர்கள் உறுப்பினராக சேர்ந்தாலும் காவல் துறையிடம் தெரிவிக்க வேண்டும்.

ஓட்டுனர்கள் கட்டாயமாக சீருடையல் ஆட்டோவை இயக்க வேண்டும் ஒழுக்க நெரிமுறைகள்ளை மீறி ஆட்டோ ஓட்டுனர்கள் மது போதையில் பொதுமக்களுக்கு இடையூராக செயல்பட்டால் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் ஷேர் ஆட்டோக்கள் ஆர்.டி.ஒ வழிகாட்டுதல் படி செயல்படவேண்டும் அறிவுரை கூறி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

மேலும் ஆட்டோ ஓட்டுனர் ஓட்டுனர் உரிமம், ஆட்டோ பர்மிட், ஆதார்கார்டு, செல்போன் உள்ளிட்ட அவர்களின் தகவல்களை பெற்ற போலீசார் முறையாக அங்கீகாரம் அளிக்கப்பட்ட ஆட்டோ நிறுத்தத்தில் போக்குவரத்துக்கு இடையூறு இன்றி பயணிகளை ஏற்றி செல்லவேண்டும் தெரிவித்தனர்.