
தாம்பரம்:- பல்லாவரத்தில் இருந்து, ஜல்லி ஏற்றி வந்த லாரி, ஈச்சங்காடு சந்திப்பில், கீழ்க்கட்டளை நோக்கி செல்ல, இடப்புறமாக திரும்பியது. அப்போது, கீழ்கட்டளையில் இருந்து, கோவிலம்பாக்கம் நோக்கி செல்ல, எதிர் திசையில் வந்த, இருசக்கர வாகனத்தின் மீது, எதிர்பாராத விதமாக லாரி மோதியது.
இதில், இருசக்கர வாகனத்தில் வந்த கோகுல்ராஜ், தனாய் மண்டேல் இருவரின் மீதும், லாரியின் சக்கரம் ஏரி இறங்கியதில், சம்பவ இடத்திலேயே இருவரும் உடல் நசுங்கி பலியாகினர்.
இச்சம்பவம் குறித்து, பள்ளிக்கரணை போக்குவரத்து புலானாய்வு பிரிவு போலிசார், இறந்தவர்களின் உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக தாம்பரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து லாரி ஓட்டினரிடம் விபத்து குறித்து விசாரித்து வருகின்றனர்,
இதே போல் சென்னை ஓ.எம்.ஆர் சாலை லாரி இடதுபுரம் திரும்பியதில் அருணாசலம்(51) என்பவர் ஓட்டி சென்ற ஸ்கூட்டி லாரியில் சக்கரதில் சிக்கி அருணாசலம் உயிரிழந்தார்.லாரி ஓட்டுனரை பிடித்த பள்ளிக்கரணை போக்குவரத்து புலனாய்வு போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.