தாம்பரம் அருகே மின்சாரம் பாய்ந்து எலட்ரீசியன் உயிரிழப்பு

மேடவாக்கம், ஜலடியான்பேட்டை பகுதியை சேர்ந்தவர் கோவிந்தசாமி (45) எலக்ட்ரீசியனாக வேலை பார்த்து வந்தார்.

இந்நிலையில் தாம்பரம் அடுத்த சந்தோஷ்புரம் கலைஞர் கருணாநிதி நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் குளிர்சாதன பெட்டியை ஒயர் மூலம் மின்சார பெட்டியில் இணைப்புதற்காக முயன்ற போது எதிர்பாராத விதமாக மின்சாரம் பாய்ந்ததில் தூக்கி வீசப்பட்டார்.

அலறல் சத்தம் கேட்டு வந்த அக்கம்பக்கத்தினர் உடனடிகாக கோவிந்தசாமியை மீட்டு குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த சேலையூர் போலீசார் விசாரனை நடத்தி வருகின்றனர்.