
தாம்பரம் தொகுதியில் கன்னடபாளையம், அன்னை அஞ்சுகம் நகர், சமத்துவ பெரியார்நகர், சசிவரதன் நகர் ஆகிய பகுதிகளில் புயல் மழையால் பாதிப்பு அடைந்த 2800 குடும்பங்களுக்கு திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு, தாம்பரம் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.ஆர்.ராஜா ஆகியோர் அரிசி, மளிகை தொகுப்பு, காய்கறிகள், ரொட்டி, போர்வை, பாய் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை நிவாரணமாக வழங்கினார்கள்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய டி.ஆர்.பாலு:-
தமிழக முதலமைச்சர் ஒன்றிய அரசிடம் 5060 கோடி அனுப்ப வேண்டும் என கடிதம் மூலம் கேட்டு கொண்ட நிலையில் நான் பிரதமரை நேரில் சந்தித்து பேசி முதல் கட்டமாக 2 ஆயிரம் கோடி வழங்க கோரினேன் அதற்கு பிரதமர் கூட்டாக நிவாரண பணிகளை மேற்கொள்வோம் என்றார்.
தற்போது 450 கோடி அனுப்பட்ட பட்டுள்ளது. செலவு செய்திட செய்திட நிதி அனுப்புவார்கள் என நம்பிக்கை உள்ளது அதனை பிரதமர் உறுதி தெரிவித்ததாக கூறினார்.
சென்னை, செங்கல்பட்டு உள்ளிட்ட 5 மாவட்டங்களில் ஒரு கோடியே 20 பேர் பாதிப்பு அடைந்துள்ளன. அதனால் தேசிய பேரிடராக அறிவிக்கவேண்டும் என கேட்டுகொண்டுள்ளோம். அதனால் அதிக நிதி கிடைக்கு பாதிக்கப்பட்ட மக்களுக்கு சீரமைப்பு பணி செய்யலாம் என்றார்.
தற்போது பாதிப்பு குறித்து ஊரக, நகர்ப்புற, பொதுப்பணி, நெடுஞ்சாலை உள்ளிட்ட பல்வேறு துறை அதிகாரிகள் கணக்கெடுத்து வருகிறார்கள அதன் பின்னர் எவ்வளவு பாதிப்பு என முழுவிவரம் தெரியவரும் என்றார்.
தாழ்வான அரசு நிலங்களில் குடியுள்ளவர்களுக்கு மாற்று இடம் கொடுத்தாலும் அவர்கள் வாழ்வாதார பிரச்சினைகள் உள்ளதால் புலம் பெயர மறுப்பு தெரிவிக்கிறார் ஆதனால் பாதிப்பு எற்படுகிறது அவர்கள் விருப்பபடி நடவடிக்கை மேற்கொள்கிறோம் என்றார்.