தாம்பரம் அருகே ஏற்கனவே கொலை வழக்கில் சிறைக்கு சென்ற நபர் மீண்டும் கொலை செய்து காவல் கட்டுபாட்டு அறைக்கு தகவல் அளித்துவிட்டு தப்பி சென்றவரை போலீசார் கைது செய்தனர்.

சென்னை தாம்பரம் அடுத்த அகரம்தென் பகுதியை சேர்ந்தவர் வினோத் நேற்று இரவு தன்னுடன் அறையில் தங்கியிருக்கும் லாரி ஓட்டுனர் குமார் என்பவருடன் நேற்று இரவு மது அருந்திவிட்டு வீட்டிற்க்கு வந்துள்ளனர்.

அப்போது மதுபோதையில் இருந்த இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த வினோத் வீட்டின் வெளியே இருந்த கல்லை கொண்டு குமார் தலையில் போட்டுள்ளார் இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்தவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

பின்பு காவல் கட்டுபாட்டு அறைக்கு தான் கொலை செய்துவிட்டதாக தகவல் அளித்த வினோத் அங்கிருந்து தப்பி சென்றுள்ளார்.

உடனடியாக சம்பவ இடத்திற்க்கு சென்ற போலீசார் குமார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் தப்பி ஓடிய குற்றவாளி வினோத்தை கைது செய்த போலீசார் விசாரித்து வருகின்றனர்.

ஏற்கனவே வினோத் இரண்டு முறை வெடுகுண்டு மிரட்டல் விடுத்த வழக்கிலும் இதே போல் மது போதையில் கத்தியால் கூலி தொழிலாளியை குத்திவிட்டு சிறைக்கு சென்று ஒரு மாதத்திற்க்கும் முன்பு வெளியே வந்தது குறிப்பிடதக்கது.