
சென்னை கிழக்கு தாம்பரத்தில் உள்ள அப்பல்லோ மருத்துவமனை சார்ப்பில் மார்பக புற்றுநோய் குறித்தான விழிப்புணர்வு நடைபயணம் நடைபெற்றது.
இதனை சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட சியோன் கல்வி குழும தலைவர் டாகடர் விஜயன் கொடி அசைத்து துவக்கி வைத்தார்.
மருத்துவமனையில் இருந்து தொடங்கிய நடைபயணத்தில் பொதுமக்கள், பள்ளி,
கல்லூரி மாணவர்கள் என 500 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு கைகளில் மார்பக புற்று நோய் குறித்த பதாகைகளை ஏந்தி தாம்பரம், வேளச்சேரி பிரதான சாலையில் சுமார் நான்கு கிலோ மீட்டர் நடைபயணம் மேற்கொண்டு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.