தாம்பரம் ஜி.எஸ்.டி சாலையில் இரண்டு மாநகர பேரூந்துகள், ஒரு லோடு வேன் அடுத்து அடுத்து மோதி விபத்து, இதனால் போக்குவரத்து நெரிசல்

தாம்பரம் ஜி.எஸ்.டி சாலையில் முன்னால் சென்ற லோடு வேன், அதனை தொடர்ந்து கிளம்பாக்கம் பேரூந்து நிலையத்திற்கு இரண்டு மாநர பேரூந்துகள் சென்றுகொண்டு இருந்த நிலையில் ஒன்றோடு ஒன்று அடுத்து அடுத்து மோதி விபத்து ஏற்பட்டது.

இதனால் வாகனங்கள் சேதமடைந்த நிலையில் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்ய சாலையிலேயே வாகனங்கள் நிறுத்தப்பட்டதால் விபத்து பகுதிக்கு பின்னால் வாகன நெரிசல் ஏற்பட்டது.