
தாமிரபரணியில் கழிவுநீர் கலப்பதை தடுக்க என்ன நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது?
என்று ஐகோர்ட் கிளை கேள்வி எழுப்பி உள்ளது.
நெல்லை மாவட்ட உள்ளாட்சி அமைப்புகள் அறிக்கை தாக்கல் செய்ய உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.
நெல்லை தாமிரபரணி ஆற்றை முறையாக பராமரிக்கக் கோரிய வழக்கில் உயர் நீதிமன்ற மதுரை கிளை இவ்வாறு ஆணையிட்டுள்ளது.