நடிகை கஸ்தூரி ஜாமின் மனு தள்ளுபடி

தெலுங்கு மக்கள் குறித்து அவதூறாக பேசிய வழக்கு; உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் முன் ஜாமின் கோரி நடிகை கஸ்தூரி தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் உத்தரவு
ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்புக்கு எதிர்காலத்தில் அனுமதி மறுக்கக்கூடாது: ஐகோர்ட் உத்தரவு

ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்புக்கு எதிர்காலத்தில் அனுமதி மறுக்கக்கூடாது என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 52 இடங்களில் ஆர்எஸ்எஸ் அணிவகுப்புக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேலும், 58 இடங்களில் அனுமதி கோரிய நிலையில் 6 இடங்களில் மட்டும் அனுமதி வழங்கவில்லை என உயர்நீதிமன்றத்தில் காவல்துறை தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து நிபந்தனைகளின் அடிப்படையில் 6 இடங்களில் ஆர்எஸ்எஸ் அணிவகுப்புக்கு அனுமதி வழங்க நீதிபதி உத்தரவிட்டார்.
தாமிரபரணியில் கழிவுநீர் கலப்பதை தடுக்க என்ன நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது?: ஐகோர்ட் கிளை கேள்வி

தாமிரபரணியில் கழிவுநீர் கலப்பதை தடுக்க என்ன நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது? என்று ஐகோர்ட் கிளை கேள்வி எழுப்பி உள்ளது. நெல்லை மாவட்ட உள்ளாட்சி அமைப்புகள் அறிக்கை தாக்கல் செய்ய உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது. நெல்லை தாமிரபரணி ஆற்றை முறையாக பராமரிக்கக் கோரிய வழக்கில் உயர் நீதிமன்ற மதுரை கிளை இவ்வாறு ஆணையிட்டுள்ளது.
கோவை ஈஷா யோகா மையத்தில் போலீசார் விசாரணை..

சென்னை ஐகோர்ட் உத்தரவுப்படி கோவை ஈஷா யோகா மையத்தில் போலீசார் விசாரணை. பலத்த போலீஸ் பாதுகாப்புடன் ஈஷா யோகா மையத்திற்குள் நுழைந்த விசாரணை குழு.
சென்னை ஐகோர்ட் பொறுப்பு தலைமை நீதிபதியாக D. கிருஷ்ணகுமார் நியமனம்

நம்பர் பிளேட் ஸ்டிக்கர் ஒட்டிய வாகனங்களை பறிமுதல் செய்க- சென்னை உயர்நீதிமன்றம்

நம்பர் பிளேட்களில் ஸ்டிக்கர்கள் ஒட்டி போக்குவரத்து விதி மீறலில் ஈடுபடும் வாகனங்களை பறிமுதல் செய்ய வேண்டும்- தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு. சென்னையில் தனியார் வாகனங்களில் ஸ்டிக்கர்கள் ஒட்ட விதிக்கப்பட்ட தடையை மாநிலம் முழுவதும் அமல்படுத்தக் கோரிய வழக்கை ஜூன் 20-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து அன்றைய தினம் விரிவான உத்தரவு பிறப்பிப்பதாக உயர்நீதிமன்றம் அறிவிப்பு.
அதிமுக ஆட்சியில் தேர்வு செய்யப்பட்ட 18 மாவட்ட கல்வி அலுவலர் பணி நியமனம் ரத்து: ஐகோர்ட் உத்தரவு

சென்னை: அதிமுக ஆட்சியில் தேர்வு செய்யப்பட்ட 18 மாவட்ட கல்வி அலுவலர் பணி நியமனம் ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 2020ல் டி.என்.பி.எஸ்.சி. சார்பில் தமிழகம் முழுவதும் 18 மாவட்ட கல்வி அலுவலர் பணியிடங்களுக்கு தேர்வு நடத்தப்பட்டது. முறையான இன சுழற்சி முறையை பின்பற்றி இட ஒதுக்கீடு வழங்காமல் பணி நியமனம் என ஐந்து பேர் தொடர்ந்த வழக்கு தொடரப்பட்டது. 4 வாரத்திற்குள் முறையான இட ஒதுக்கீடு முறையை பின்பற்றி மாற்றி அமைக்கப்பட்ட பட்டியலை […]
ரூபாய் 5 லட்சம் கோடி மதிப்புள்ள ஹெராயின் காணவில்லை?

போதைப்பொருள் தடுப்புப் பிரிவால் பறிமுதல் செய்யப்பட்ட ரூ.5 லட்சம் கோடி மதிப்புள்ள ஹெராயின் காணாமல் போனது குறித்து விசாரணை நடத்தக் கோரி டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு! கடந்த 2018 -2020 இடையில் போதைப்பொருள் தடுப்புப் பிரிவால் பறிமுதல் செய்யப்பட்ட ரூ. 5 லட்சம் கோடி மதிப்பிலான ஹெராயின் காணாமல் போயுள்ளதாக பத்திரிகையாளர் அரவிந்தாக்சன் டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு! அந்த காலகட்டத்தில் போதைப்பொருள் தடுப்புப் பிரிவால் 70,772 கிலோ ஹெராயின் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. காணாமல் போன விவகாரத்தை விசாரிக்கக் […]
விவிபேட் வழக்கு: உச்ச நீதிமன்றத்தில் அனைத்து மனுக்களும் தள்ளுபடி!

உச்ச நீதிமன்ற நீதிபதிகள், சந்தேகத்தின் அடிப்படையில் தோ்தலைக் கட்டுப்படுத்தவோ அல்லது தோ்தல் ஆணையத்துக்கு உத்தரவு பிறப்பிக்கவோ முடியாது. மற்றொரு அரசியல் சாசன அமைப்பைக் கட்டுப்படுத்தும் அதிகாரம் உச்சநீதிமன்றத்துக்கு இல்லை என்று தெரிவித்தனர். உச்சநீதிமன்ற நீதிபதிகள் சஞ்சீவ் கன்னா, தீபாங்கா் தத்தா ஆகியோா் அடங்கிய அமர்வு மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்தில் பதிவான வாக்குகளுடன் வாக்கு ஒப்புகைச் சீட்டுகளை (விவிபேட்) முழுமையாக எண்ணி ஒப்பிடக் கோரி தாக்கல் செய்யப்பட்ட அனைத்து மனுக்களையும் தள்ளுபடி செய்துள்ளது.
அமைச்சர் பெரியசாமிக்கு எதிரான சூமோட்டோ வழக்கில் இன்று தீர்ப்பளிக்கிறது சென்னை உயர் நீதிமன்றம்

இன்னும் சற்று நேரத்தில் தீர்ப்பளிக்கிறார் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ். லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கில் இருந்து பெரியசாமி விடுவிக்கப்பட்டதை எதிர்த்து தாமாக முன்வந்து விசாரணை சிறப்பு நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து சென்னை ஐகோர்ட் தாமாக முன்வந்து மறு ஆய்வு வழக்காக விசாரித்தது. தமிழக வீட்டு வசதி வாரிய வீட்டை ஒதுக்கியதில் முறைகேடு என பெரியசாமி மீது வழக்கு.