தாம்பரம் மாநகராட்சியில் தற்போது வீடு வீடாக குப்பைகளை சேகரித்து தரம் பிரித்து அதனை ஒழுங்கு படுத்துகிறார்கள். திருமண மண்டபங்கள், ஹோட்டல்கள், அதிக குப்பை சேரும் அடுக்குமாடி குடியிருப்புகளில் குப்பைகளை அள்ளுவதற்கு தனியார் நிறுவனங்களை தாம்பரம் மாநகராட்சி ஏற்பாடு செய்துள்ளது. இந்த நிறுவனங்கள் ஒரு வீட்டுக்கு 100 முதல் 150 ரூபாய் வரை வசூலித்து குப்பைகளை தரம் பிரித்து அள்ளிச் செல்கிறார்கள். இந்த நிலையில் குப்பைகளை தரம் பிரிப்பது குறித்து ஐரோப்பிய நாடுகளில் டென்மார்க் நாட்டில் உள்ள கென்டாப்ட் நகராட்சியில் சிறந்த முறையில் திடக்கழிவு மேலாண்மை நடைபெற்று வருவதாக தெரிய வந்தது. இதனை தாம்பரம் மாநகராட்சியிலும் பயன்படுத்துவதற்காக சட்டமன்ற உறுப்பினர் எஸ் ஆர் ராஜா வழிகாட்டுதலின் பேரிலும், மாநகராட்சி ஒப்புதலின் பேரில் சிட்லப்பாக்கம் கவுன்சிலர் ஜெகன் டென்மார்க் நாட்டுக்கு சென்று கென்டாப்ட் நகராட்சியில் குப்பைகளை எவ்வாறு தரம் பிரிக்கிறார்கள் என்பதை நேரில் பார்வையிட்டார்.