ஸ்ரீபெரும்புதூர் நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் டி ஆர் பாலு பல்லாவரம் சட்டமன்ற தொகுதி அஸ்தினாபுரம் பஸ் நிலையம் பகுதியில் வாக்கு சேகரித்து பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்பொழுது ஏராளமான திமுக கூட்டணி கட்சியினர் இருசக்கர வாகனங்களில் வந்தனர். இதன் காரணமாக அஸ்தினாபுரம் பஸ் நிலையம் பகுதியில் பஸ்கள் உள்ளே வரவில்லை என கூறப்படுகிறது. இதனால் நீண்ட நேரமாக பஸ்ஸுக்காக காத்திருந்த பெண் ஒருவர் டி ஆர் பாலு பிரச்சாரத்துக்கு வரும்போது அவரது வாகனத்துக்கு முன்னால் நின்று வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.