அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் பயணித்த Air Force One விமானம், சுவிட்சர்லாந்தின் டாவோஸ் நகரில் நடைபெறும் உலக பொருளாதார மன்றத்தில் பங்கேற்பதற்காக புறப்பட்ட நிலையில், பயணத்தின் போது சிறிய மின்சார கோளாறு கண்டறியப்பட்டது.

இதையடுத்து, பாதுகாப்பு முன்னெச்சரிக்கையாக விமானம் வாஷிங்டனில் உள்ள Joint Base Andrews விமான நிலையத்துக்கு திரும்பி தரையிறங்கியது.

விமானம் புறப்பட்ட 30–40 நிமிடங்களுக்குள் “சிறிய மின்சார பிரச்சினை” கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து, விமானக் குழு இந்த முடிவை எடுத்ததாக வெள்ளை மாளிகை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.