ஐபிஎல் போட்டிகள் பாகிஸ்தான் சண்டை காரணமாக தள்ளி வைக்கப்பட்டன. தற்போது மீண்டும் இந்த போட்டிகளை நடத்த உள்ளனர். ஏற்கனவே போட்டி நடைபெறும் மைதானங்களுக்கு அடிக்கடி வெடிகுண்டு மிரட்டல்கள் வந்த வண்ணம் உள்ளன. சென்னையில் உள்ள சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்திற்கு ஏற்கனவே ஒருமுறை வெடிகுண்டு மிரட்டல் வந்தது. தற்போது மீண்டும் நேற்று வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது. இதனை ஒட்டி போலீசார் சோதனை நடத்தினார்கள். வெடிகுண்டு மிரட்டல் வெறும் புரளி என்று தெரியவந்தது