பல்லாவரம் அருகே மின்சார ரயில் மோதிய விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை பல்லாவரம் ரயில் நிலைய தண்டவாளம் அருகே நேற்று இரவு இறந்த நிலையில் பெண் ஒருவர் சடலமாக இருப்பதாக தாம்பரம் இருப்புபாதை போலீசாருக்கு கிடைத்த தகவலை அடுத்து சம்பவ இடத்திற்க்கு சென்ற போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பின்பு நடத்திய விசாரனையில் பொழிச்சலூர் பகுதியை சேர்ந்த மகாலட்சுமி (40) என்பதும் நேற்று இரவு செல்போன் பேசிய படி கவனகுறைவாக தண்டவாளத்தை கடந்த போது சென்னை கடற்கரையில் இருந்து அரக்கோணம் சென்ற மின்சார ரயில் மோதியதில் சம்பவ இடத்திலேயே உயுரிழந்தது தெரியவந்துள்ளது.