மே-1ம் தேதி தொழிலாளர் தினத்தையொட்டி தாம்பரம் அடுத்த செம்பாக்கத்தில் திமுக தொழிலாளர் அணி சார்பில் தாம்பரம் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.ஆர்.ராஜா நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
மே-1ம் தேதி தொழிலாளர்கள் தினத்தை முன்னிட்டு தாம்பரம் மாநகர தொழிலாளர் அணி சார்பில் செம்பாக்கத்தில் தொழிலாளர்கள் தினம் கொண்டாட்டப்பட்டது.
மாநகராட்சி தூய்மை பணியாளர்கள், ஆட்டோ ஓட்டுனர்கள், கூலி தொழிலாளர்கள் கலந்துக்கொண்ட நிலையில் தாம்பரம் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.ஆர்.ராஜா, தாம்பரம் மாநகராட்சி மேயர் வசந்தகுமாரி ஆகியோர் தொழிலாளர்களுக்கு மறியாதை செய்த நிலையில் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்கள்.
இந்த நிகழ்ச்சியில் மாநகர தொழிலாளர் அணி செயலாளர் விஜயகுமார், பகுதி செயலாளர் இரா.சுரேஷ், மண்டல குழு தலைவர்கள் டி.காமராஜ், ஜெயபிரதிப் சந்திரன், கவுன்சிலர்கள் ஜெகன், சுரேஷ், ராஜா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.