சென்னை மாநகராட்சி பகுதியில் வீடுகளில் செல்லப்பிராணி வளர்ப்பவர்கள் சென்னை மாநகராட்சியிடம் உரிமம் பெறாவிட்டால் ரூ.5,000 அபராதம் விதிக்கப்படும். செல்லப்பிராணிகளை பொது இடங்களில் அழைத்து செல்லும்போது கழுத்து பட்டை இன்றி அழைத்து சென்றால் உரிமையாளருக்கு ரூ.500 அபராதம் விதிக்கப்படும். பொது இடங்களில் செல்லப்பிராணிகள் பொதுவெளியில் கழிவு ஏற்படுத்த உரிமையாளர்கள் அனுமதிக்க கூடாது. பொது இடங்களில் செல்லப்பிராணிகள் கழிவு ஏற்படுத்தினால், அதனை சுத்தம் செய்வது உரிமையாளரின் கடமை.

வரும் நவம்பர் 24ம் தேதி முதல் இந்த விதிமுறைகளை அமல்படுத்த சென்னை மாநகராட்சி மாமன்ற கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.