
சென்னை அடையாறு எல்.பி சாலையில் திடீரென தீ பிடித்து எறிந்த MTC பேருந்து!
ஓட்டுனரின் எச்சரிக்கையால் நல்வாய்ப்பாக உயிர் தப்பிய பயணிகள்!
மக்கள் பயன்பாட்டிற்காக கடந்த நான்கு நாட்களுக்கு முன்பு CNG கேஸ் பொருத்தப்பட்ட எம்.டி.சி பேருந்து சென்னையில் அறிமுகப்படுத்தபட்டது.
இந்நிலையில் இன்று சென்னை பாரிஸில் இருந்து சிறுசேரி நோக்கி வழக்கமாக புறப்பட்ட இந்த (102) பேருந்து மூன்று மணி அளவில் அடையாறு பேருந்து நிலையம் அருகில் வந்து கொண்டிருக்கையில் ஓட்டுனருக்கு அருகாமையில் உள்ள இன்ஜின் பகுதியில் இருந்து புகை தென்பட்டுள்ளது. இதைக் கண்ட ஓட்டுநர் மற்றும் நடத்துனர் ஆகியோர் பேருந்தை சாலையோரம் நிறுத்தி பயணிகளை உடனடியாக அப்புறப்படுத்தியுள்ளனர். உடனடியாக சம்பவ இடத்தில் இருந்த காவலர்களும், போக்குவரத்து காவலர்களும் தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர். மேலும் பேருந்து நிறுத்தப்பட்டிருந்த இடத்தில் சுற்றியுள்ள அனைத்து வணிக கட்டிடங்களிலும் பணியில் இருந்த ஊழியர்களை வெளியேற்றம் செய்து கடையை அடைத்தனர்.
15 நிமிட இடைவெளியில் சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்புத் துறையினர் அரை மணி நேர போராட்டத்திற்கு பிறகு தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். பேருந்து மேற்கூரிலிருந்து இருக்கைகள் வரை முழுவதுமாக எரிந்துபோனது இதனால் ஒரு மணி நேரம் அப்பகுதியில் பரபரப்பானது. மேலும் தெரிந்த பேருந்து போக்குவரத்து கழக ஊழியர்கள் அப்புறப்படுத்தினர். அதனை தொடர்ந்து ஏற்பட்டிருந்த போக்குவரத்து நெரிசலையும் காவலர்கள் சீர் படுத்தினர்.