
செங்கல்பட்டு மாவட்டத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை இல்லை வழக்கம்போல் இயங்கும் என மாவட்ட ஆட்சித்தலைவர் அறிவித்தார். ஆனால் காலை முதல் தாம்பரம், பெருங்களத்தூர், வண்டலூர், முடிச்சூர், வரதராஜபுரம், சேலையூர் செம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் மழைபெய்து வரும் நிலையில் அரசு, அரசு உதவி பெரும் மற்றும் தனியார் பள்ளி மாணவர்கள் நனைந்தவாறு பள்ளிக்கு சென்றனர். மேலும் மாணவர்களை பெற்றோர் பள்ளிக்கு இருசக்கர வாகனங்களில் நனைந்தவாறு அழைத்து சென்றனர்…