சென்னை குரோம்பேட்டையில் ஜி.எஸ்.டி சாலையை கடக்கும் விதமாகவும் ரயில் நிலையம் செல்வதற்க்கும் பொதுமக்கள் எளிதாக செல்லும் வகையில் நகரும் படிக்கட்டுகள் அமைக்கபட்டுள்ளது.

இதனால் தினமும் ஏராளமானோர் இந்த நகரும் படிக்கட்டிகள் மூலம் ரயில் நிலையத்திற்க்கும், ரயில் நிலையத்திலிருந்து ஜி.எஸ்.டி சாலை வருவதற்க்கு பயன்படுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் வடகிழக்கு பருவ மழை தொடங்கி உள்ள நிலையில் சென்னை புறநகர் பகுதிகளில் அவ்வப்போது விட்டு விட்டு கனமழை பெய்து வருகிறது.

இன்று திடிரென பலத்த காற்றுடன் மழை பெய்ததால் நகரும் படிக்கட்டின் ஒருபக்கம் மேற்கூரை முற்றிலுமாக பெயர்ந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் அதிர்ஷடவசமாக அவ்வழியாக செல்லும் பயணிகள் உயிர்தப்பினர்.

இதனையடுத்து தகவல் அறிந்து வந்த ஊழியர்கள் தற்காலிகமாக நகரும் படிக்கட்டுகள் பயன்பாட்டை நிறுத்தி வைத்துள்ளனர்.

இதனால் மீண்டும் பயணிகள் ஆபத்தான முறையில் சாலையை கடந்து ரயில் நிலையத்திற்க்கு செல்கின்றனர்.

உடனடியாக நகரும் படிகட்டுகளை சீர் செய்து மக்கள் பயன்பாட்டிற்க்கு அதிகாரிகள் கொண்டு வர வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.