மடிப்பாக்கத்தில் மோட்டார் சைக்கிள் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் மின்வாரிய உதவி இயக்குனர் பலி

சென்னையை அடுத்த மடிப்பாக்கம் கண்ணகி தெருவை சேர்ந்தவர் கோபால் இவரது மகன் செந்தில்குமார்(46). இவர் சித்தாலப்பாக்கம் மின்சார வாரிய உதவி இயக்குனராக பணியாற்றி வந்தார்.

இன்று இரவு மேடவாக்கம்-பரங்கிமலை சாலையில் இருந்து மடிப்பாக்கம் சபரி சாலை வழியாக வீட்டிற்கு தனது இரு சக்கர வாகனத்தில்(TN 32 L 8427 HONDA SHINE ) சென்றுக் கொண்டு இருந்தார். அப்போது பின்புறம் வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோதியது.

இதில் நிலை தடுமாறி கீழே விழுந்த அவரின் ஹெல்மெட் அணிந்த தலை மீது வாகனத்தின் சக்கரம் ஏறி இறங்கியது. இந்த விபத்தில் தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே செந்தில்குமார் இறந்தார்.

இது குறித்து தகவல் அறிந்த போலீசார் வந்து உடலை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து பரங்கிமலை போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து மோதி விட்டு தப்பி சென்ற வாகனம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.