தாம்பரம் மாநகராட்சி 43 வது வார்டு திமுக கவுன்சிலரும், உமாபதி அன் சன்ஸ் நிறுவன தலைவருமான லயன்.சி.ஜெகன் பிறந்தநாள் கிழக்கு தாம்பரம் பாரதமாதா தெருவில் உள்ள அரங்கில் வெகு விமரிசையாக கொண்டாட்டப்பட்டது.

இதில் தாம்பரம் மாநகராட்சி மண்டல குழு தலைவர் ஜெயபிரதீப் சந்திரன், திமுக நிர்வாகிகள், நலச்சங்கத்தினர், நண்பர்கள், உமாபதி அன் சன்ஸ் நிறுவனத்தில் பணிபுரிபவர்கள் என பல்வேறு தரப்பினர்கள் கலந்துக்கொண்டனர்.

அப்போது பிறந்தநாள் கேக் வெட்டப்பட்டு இனிப்புகள் வழங்கப்பட்டது.

அனைவரும் சி.ஜெகனுக்கு சால்வை அணிவித்தும், மலர் கொத்துகள், பரிசுகளை வழங்கி யும் வாழ்த்துகளை கூறினார்கள்.

அதனையடுத்து அனைவருக்கும் சி.ஜெகன் விருந்து அளித்தார்.