தமிழக முன்னாள் முதல்வர் ஜெ.ஜெயலலிதாவின் 77-வது பிறந்தநாளையொட்டி, செங்கல்பட்டு மேற்கு மாவட்டம், செம்பாக்கம் – சிட்லபாக்கம் பகுதி கழகம் சார்பில், பகுதி கழக செயலாளர் இரா. மோகன் ஏற்பாட்டில், 34-வது வார்டில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை மாவட்ட கழக செயலாளர் சிட்லபாக்கம் ச. இராசேந்திரன் வழங்கினார். உடன் மாவட்ட எம்.-ஜி.ஆர் இளைஞர் அணி செயலாளர் ஜி.எஸ். புருஷோத்தமன், 34 –வது வார்டு வட்ட செயலாளர் ரவி, அவைத்தலைவர் என். பாஸ்கரன், ஜெ. முரளி (எ) முருகேசன், விஜய், முன்னாள் உறுப்பினர் விஜயலட்சுமி, ஆர். சுரேஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.