சிட்லபாக்கத்தில் 90 லட்சம் மதிப்பீட்டில் புதிய கால்நடை மருத்துவமனை, தாம்பரம் எம்.எல்.ஏ எஸ்.ஆர்.ராஜா அடிகல்நாட்டி பணிகளை துவக்கினார்.

சிட்லப்பாக்கத்தில் 60 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட கட்டிடத்தில் கால்நடை மருத்துவமனை செயல்பட்டுவந்தது.

இந்த நிலையில் அதே வளாகத்தில் புதியதாக 90 லட்சம் மதிப்பீட்டில் கால்நடை மருத்துவமனை கட்டும் பணியை தாம்பரம் எம்.எல்.ஏ எஸ்.ஆர்.ராஜா அடிக்கல் நாட்டி பணிகளை துவக்கினார். மண்டலகுழு தலைவர் ஜெயபிரதீப் சந்திரன், கவுன்சிலர்கள் சுரேஷ், ஜெகன், கால்நடை மருத்துவ அதிகாரிகள், பொதுப்பணித்துறை அதிகாரிகள், திமுக நிர்வாகிகள் மனோகரன், பரிமளா சிட்டிபாபு, சீனிவாசன் உள்ளிட்டோர் கலந்துக்கொண்டனர்.