சிட்லபாக்கத்தில் கார் மோதி மின்கம்பம் கீழே சாய்ந்தது அதனை அகற்ற கவுன்சிலர் ஜெகன் உடனடியாக நடவடிக்கை எடுத்தார்

தாம்பரம் மாநகராட்சிக்கு உட்பட்ட சிட்லபாக்கம் 43வது வார்டுக்கு உட்பட்ட பாபு தெரு மற்றும் கலைவாணர் தெரு சந்திப்பில் சனிக்கிழமை காலை 5:45 மணி அளவில் கார் மோதியதில் மின் கம்பம் உடைந்து சாய்ந்தது. பற்றிய தகவல் அறிந்த மாமன்ற உறுப்பினர் சிட்லபாக்கம் சி.ஜெகன் சம்பவ இடத்திற்கு. விரைந்து வந்தார் . சம்பந்தப்பட்ட அதிகாரிகளை அழைத்து, கிரேன் இயந்திரம் மூலம் கம்பத்தின் அடியில் சிக்கியிருந்த காரை அப்புறப்படுத்தினார். மின் கம்பத்தை மாற்றவும் மின், இணைப்பை சீர்படுத்துவதற்கும் உண்டான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. மின்துறை ஊழியர்கள், காவல்துறை அதிகாரிகள் மற்றும் மாநகராட்சி ஊழியர்களின் உதவியோடு சீரமைப்புக்கும் பணி நடைபெற்று வருகிறது.