
சிட்லபாக்கம் பகுதியில் கஸ்தூரிபாய் தெரு சாலை புதுப்பிக்கும் பணி தொடங்கியுள்ளது. மாமன்ற உறுப்பினர் சிட்லபாக்கம் சி.ஜெகன் தொடர் முயற்சியால், எஸ்.ஆர்.ராஜா எம்.எல்.ஏ தாம்பரம் மாநகராட்சி 3வது மண்டலக்குழு தலைவர் ச.ஜெயப்பிரதீப் உதவியால் சாலையை அமைப்பதற்கு முன்பு பழைய தார் சாலையை சுரண்டி எடுத்து புதிய தார் சாலை அமைப்பதற்கு பணி தொடங்கப்பட்டது.