
சபரி மலைக்கு சுற்றுலா செல்லும் பயணிகள் பிளாஸ்டிக் கழிவுகளை அங்கேயே விட்டு வருகிறார்கள். இதனை சாப்பிடும் விலங்குகள் இறந்து விடுகின்றன சமீபத்தில் ஒரு ஆண் யானை இது போன்று பிளாஸ்டிக் கழிவுகளை தின்று இறந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனை தொடர்ந்து கேரள உயர்நீதிமன்றம் இதுபோன்று மலைப்பகுதியில் பிளாஸ்டிக் கழிவுகளை பயன்படுத்துபவர்களுக்கு கடுமையான அபராதம் விதிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளனர். சபரிமலை பகுதியில் ஹோட்டல்கள் மூலம் 24 டன் கழிவுகள் உருவாகின்றன. அதனையும் நீதிமன்றம் கண்டித்து உள்ளது.