மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் சங்கரய்யா, சென்னையில் காலமானார். அவருக்கு வயது 102. உடல் நலக் குறைவால் சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் மரணம் அடைந்தார்.

அவரின் உடலுக்கு முதலமைச்சர் உட்பட பல்வேறு தலைவர்கள் அஞ்சலி செலுத்திய நிலையில் அரசு மரியாதையுடன் பெசன்ட் நகர் மின்மயானத்தில் அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது.

இந்நிலையில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் நேரில் வந்து அவரது குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்
சங்கரய்யா உருவப்படத்திற்கு மாலை அணிவித்து வணங்கினார்

பின்னர் அவரது குடும்பத்தினரிடம் ஆறுதல் தெரிவித்தார் சிறு வயது முதலே ஏ பி வி பி இயக்கத்தில் இருந்தாலும் சங்கரய்யா மீது பெரும் மதிப்பு எனக்கு உண்டு என அவரது குடும்பத்தினரிடம் தெரிவித்தார்மூத்த தலைவரின் இறப்பிற்கு இரங்கல் தெரிவித்தார் அதனைத் தொடர்ந்து பத்திரிகையாளரிடம் பேசிய அவர்

தமிழகத்தின் மூத்த அரசியல் தலைவர், சுதந்திர போராட்ட வீரராக கடைசி வரை கொள்கை பிடிப்புடன் இருந்தவர்…

சங்கரய்யா சமூக பங்களிப்பு மிக முக்கியமானது.

அவருக்கு மணிமண்டபம் கட்ட வேண்டும் என்பது ஏற்கனவே பேசி இருக்கிறார்கள். சரியான கோரிக்கை தான் நானும் வலியுறுத்துகிறேன் என்றார்..

பாரத ரத்னா விருது சாத்தியமா என்ற கேள்விக்கு
அவருக்கான விருது குறித்து அவர் குடும்பத்துடன் இணைந்து என்ன சாத்தியமோ நடவடிக்கை எடுப்போம் எனவும் தெரிவித்தார்.