
திருப்போரூர் அருகே கேளம்பாக்கம் ஊராட்சியில் திமுக சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு விழா நடைபெற்றது.
தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்களின் அறிவுறுத்தலின்படி தமிழகம் முழுவதும் பொதுமக்களின் தாகத்தை தீர்க்க திமுக சார்பில் தண்ணீர் பந்தல் திறக்க வேண்டுமென கழக நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தினார். அதன் பெயரில் செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட கேளம்பாக்கம் ஊராட்சியில் திமுக ஊராட்சிமன்ற தலைவர் ராணி எல்லப்பன், ஏற்பாட்டில் தண்ணீர் பந்தலை ரிப்பன் வெட்டி திறந்து வைத்து பொதுமக்களுக்கு இளநீர், நுங்கு, மோர், தர்பூசணி, பதநீர் மற்றும் குளிர்பானங்களை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் தகவல் தொழில்நுட்ப ஒருங்கிணைப்பாளர் எல்லப்பன், சாத்தான்குப்பம் திமுக கிளைச் செயலாளர் பாளையம் ஊராட்சி துணைத் தலைவர் பாஸ்கர் உள்ளிட்ட ஏராளமான திமுகவினர் கலந்து கொண்டனர்.