
கேளம்பாக்கம் அருகே வீராணம் குடிநீர் ராட்சத குழாய் மீது டாரஸ் லாரி மோதியதில் பல லட்சம் லிட்டர் குடிநீர் வீனாகியது.
கேளம்பாக்கம்-வண்டலூர் சாலை மாம்பாக்கம் பகுதியில் சென்னையை நோக்கி பாதிக்கப்பட்ட வீராணம் குடிநீர் ராட்ச குழாய் இணைப்பு மீது கேளம்பாக்கம் நோக்கி சென்ற டாரஸ் லாரி கட்டுப்பாட்டை இழந்து மோதியதில் குழாய் உடைந்து பல லட்சம் லிட்டர் குடிநீர் வெளியேறி வீனாகியது.
இதனை வெகுநேரமாக தடுக்காமல் குடிநீர் வெளியேறியதை அப்பகுதியில் செல்வோர் பார்தவாறு சென்றனர்.