குரோம்பேட்டை ராதாநகர் ரெயில்வே சுரங்கப்பாதை இறுதிகட்ட பணிகளை அதிகாரிகளுடன் பல்லாவரம் சட்டமன்ற உறுப்பினர் ஆய்வு, மே மாதம் துவக்கத்தில் மக்கள் பயன் பாட்டிற்கு வரும் என தகவல்

குரோம்பேட்டை ராதாநகர் ரெயில்வே சுரங்கப்பாதை இறுதிகட்ட பணிகள் நடைபெரும் நிலையில் ஜி.எஸ்.டி சாலையில் இணைக்கும் பகுதி வரைப்படத்தை தமிழக நெடுஞ்சாலை துறையினர் வெளியிட்டனர்.

இதனையடுத்து பல்லாவரம் சட்டமன்ற உறுப்பினர் இ.கருணாநிதி, நெடுஞ்சாலை துறை, ரெயில்வே துறை அதிகாரிகளுடன் ஆய்வு செய்தார்.

அதனையடுத்து செய்தியாளர்களிடம் கூட்டாக தெரிவிக்கையில் ராதாநகர் ரெயில்வே சுரங்கப்பாதை 20 அடி அகலம் கொண்டது. இதில் இறுவழியில் இலகுரக வாகனங்கள் 3.5 மீட்டர் உயரத்தில் கடக்கும் விதமாக அமைக்கப்பட்டுள்ளது. குரோம்பேட்டை ரெயில் நிலையத்தில் மேற்கு பகுதியில் 20 சதவிகிதம் பணிகளும், கிழக்கு பகுதியில் 10 சதவீகித பணிகளும் உள்ளதால் இதனை விரைந்து முடித்து மே மாத துவக்கத்தில் மக்கள் பயன் பாட்டிற்கு வரும் அதற்கான இறுதி வடிவ வரைப்படத்தை நெடுஞ்சாலை வெளிட்ட நிலையில் ஆய்வு நடத்தியதாக தெரிவித்தனர்.

இந்த ஆய்வின் போது 2 வது மண்டலகுழு தலைவர் ஜோசப் அண்ணாதுரை, கவுன்சில புஹிராபானு நாசர், நெடுஞ்சாலை கோட்ட பொறியாளர் ஐய்யாதுரை, உ தவி கோட்ட பொறியாளர் சுரேஷ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.