குரோம்பேட்டை ராதா நகர் சுரங்கப்பாதை வேலை கடந்த 15 ஆண்டுகளாக வைக்கிறது இந்த பணி எப்போது முடியும் என்ற கேள்வி எழுந்துள்ளது

குரோம்பேட்டையில் ராதா நகர் செல்லும் பாதையில் தினசரி 2 லட்சத்திற்கு அதிகமான மக்கள்வந்து செல்கிறார்கள். ரயில்வே கேட் அடிக்கடி மூடப்படுவதால் அங்கு கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வந்தது இதனை தீர்க்க அந்த பகுதியில் ரயில்வே சுரங்கப்பாதை அமைக்க திட்டமிடப்பட்டது 2015 ஆம் ஆண்டில் திட்டமிடப்பட்டு 17 கோடிக்கு இந்த திட்டத்தை உருவாக்க டெண்டர் விட்டு பணிகள் தொடங்கின ஆனால் ரயில்வே நிலம் கொடுப்பது மற்றும் பல்வேறு பிரச்சனைகளால் இந்த திட்டம் தாமதமா சி வருகிறது

லட்சக்கணக்கான மக்கள் கடந்து செல்லும் இந்த ரயில் பாதை பாதையில் சுரங்க பாதை அமைக்க கோரி பல்வேறு போராட்டங்களின்மூலம் மக்கள் வற்புறுத்தியதால் ஆமை வேகத்தில் பணிகள் நடந்து வந்தாலும்முழுவதும் எப்போது முடியும் என்ற கேள்வி எழுந்துள்ளது. குறித்த காலத்தில் முடிக்காமல் ரயில்வே இலா காவும் மற்ற துறைகளும் இதனை தாமதப்படுத்தி வருகின்றன..தற்போதும் 90 சதவீத பணிகள் முடிந்து விட்டாலும் மீதி பணிகளை எப்போது தொடங்குவார்கள் என்பது தெரியாத நிலை உள்ளது. இதற்கு விடிவு காலம் எப்போது வரும் என்று மக்கள் வேதனையுடன் காத்திருக்கிறார்கள்